Date:

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்கப்படும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

கடந்த 23ஆம் திகதி தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவு காரணமாக கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

 

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலின் பேரில், பிராந்திய தபால் அத்தியட்சகர்களின் மேற்பார்வையில், உரிய தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

 

 

தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...