தென் கொரியாவில் உயிரிழந்தோரின் உடல்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை!

தென் கொரியாவின் ஹ்வாசோங் (Hwaseong) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக தென் கொரிய பொலிஸ் அதிகாரிகள், சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு நவம்பர் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இலங்கைத் தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு தென் கொரிய அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

 

உயிரிழந்த இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்த பின்னரே தென் கொரியாவிற்குப் பணிக்காகச் சென்றுள்ளனர்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தூதரக மற்றும் நலன்புரி உதவிகளை உறுதிப்படுத்துவதுடன், சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

22 மாதங்களில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சாதனை வருமானம்!

2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிலிருந்து ஈட்டப்பட்டுள்ள மொத்த...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு

07 மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.       நேற்று (27) இரவு 9.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த...