Date:

ரஷ்யா செல்லவுள்ள இலங்கை பிரதிநிதிகள்

ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

 

ஜூன் 5 – 7 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கை பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் பற்றிய தகவல்களைப் பெற பாதுகாப்பு அமைச்சு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் அந்த இலக்கத்திற்கு இதுவரை 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...