பொரளையில் பாதசாரியைத் தாக்கிய சாரதி கஞ்சாவுக்கு அடிமையானவர் என உறுதி

கொழும்பு, பொரளை – கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள் கடவையை மறித்து, பாதசாரி ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சாரதி கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர் என்பது மருத்துவ அறிக்கைகளின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

 

இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற தம்பதியினர், பொரளை கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முயன்றபோதே கடந்த 20ஆம் திகதி பிற்பகல் 3.30 அளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

 

 

 

அந்த சமயம், சமிக்ஞை விளக்கு சிவப்பாகக் காட்டப்பட்ட நிலையிலும், இராஜகிரிய திசையிலிருந்து கனத்தை சுற்றுவட்டத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று பாதசாரிகள் கடவையை மறித்து நிறுத்தப்பட்டிருந்ததுடன், சாரதி தொடர்ந்து ஹோர்னை ஒலி எழுப்பிக்கொண்டிருந்துள்ளார்.

 

 

 

அதனைத் தொடர்ந்து குறித்த சாரதி தம்பதியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பாதசாரிகளில் ஒருவரை தாக்கி அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவையடுத்து, பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

 

 

 

விசாரணைகளின் அடிப்படையில், பொரளைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்தனர்.

 

 

 

சந்தேகநபர் கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் கஞ்சாவுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார்.

 

 

பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர், தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

DMT இணையத்தளம் வழமைக்குத் திரும்பிவில்லை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இலக்கு வைத்துச் சனிக்கிழமை (21) இரவு இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன்...

சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம்...

எல்லை தாண்டிய சைபர் நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நாட்டுக்கு வந்த அமெரிக்க FBI மற்றும்...