சின்ன வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்வு; சில மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

 

 

மத்திய வங்கியினால் கடந்த இரு வாரங்களில் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகளின் ஊடாக இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

இதற்கமைய, புறக்கோட்டை (5 ஆம் குறுக்கு தெரு) சந்தையில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை, கடந்த 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527 ரூபாய் 60 சதமாகப் பதிவாகியிருந்த நிலையில், 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 675 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

 

ஒரு வார காலப்பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை 147 ரூபாய் 40 சதத்தினால், சுமார் 27.9 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

 

 

இதே காலப்பகுதியில், புறக்கோட்டை சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலை 37 ரூபாய் 68 சதத்திலிருந்து 41 ரூபாய் 75 சதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு வாரத்திற்குள் 4 ரூபாய் 07 சதத்தினால், சுமார் 10.8 சதவீத அதிகரிப்பாகும்.

 

 

மேலும், நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திலும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை 700 ரூபாயிலிருந்து 820 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 120 ரூபாய் அல்லது 17.1 சதவீத அதிகரிப்பாகப் பதிவாகியுள்ளது.

 

 

அத்துடன், அங்கு வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலை 39 ரூபாய் 60 சதத்திலிருந்து 42 ரூபாயாக அதிகரித்துள்ளது.

​

 

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் புறக்கோட்டை சந்தையில் சில மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

 

இதற்கமைய, ஒரு கிலோகிராம் போஞ்சியின் சராசரி சில்லறை விலை 580 ரூபாயிலிருந்து 560 ரூபாயாகவும், கோவாவின் விலை 720 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொரளையில் பாதசாரியைத் தாக்கிய சாரதி கஞ்சாவுக்கு அடிமையானவர் என உறுதி

கொழும்பு, பொரளை - கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி பாதசாரிகள் கடவையை மறித்து, பாதசாரி ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சாரதி...

DMT இணையத்தளம் வழமைக்குத் திரும்பிவில்லை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இலக்கு வைத்துச் சனிக்கிழமை (21) இரவு இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன்...