நைஜீரியாவின் தெற்கு பேயல்சா மாகாணத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்கச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகில் பயணித்தவர்கள் கரையோரமாகச் செல்லுமாறு ஓட்டுநரிடம் கோரிய போதிலும், அவர் அதனை நிராகரித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகு ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், படகு மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
படகில் பயணித்த மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


