மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இலக்கு வைத்துச் சனிக்கிழமை (21) இரவு இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் எனப் பொதுமக்களுக்குத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
பொதுமக்கள் தமது முன்பதிவுகளை [https://dmtappointments.dmt.gov.lk](https://dmtappointments.dmt.gov.lk) என்ற இணையவழித் தளத்தின் ஊடாகவோ, அல்லது 0112 117 116 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ தொடர்ந்து மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.


