விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தலை பிறப்பித்துள்ளது.

 

 

முன்னாள் அமைச்சர் விடுத்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தது.

 

 

சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

 

குறித்த முறைப்பாடு தொடர்பாக ஏற்கனவே விமல் வீரவங்சவிற்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தினத்தன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக இவ்வாறு மீளவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பு மத்திய பாடசாலைகளுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர்...

  கொழும்பு மத்திய பிரதேசத்தில் உள்ள 35 பாடசாலைகளுக்கு ரூ. 8.2 மில்லியன் பெறுமதியான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பு பிரதேச...