கொழும்பு மத்திய பாடசாலைகளுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா கையளிப்பு

 

கொழும்பு மத்திய பிரதேசத்தில் உள்ள 35 பாடசாலைகளுக்கு ரூ. 8.2 மில்லியன் பெறுமதியான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பு பிரதேச செயலகத்தில், (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

 

முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

இதன்போது, ‘ஸ்மார்ட் போர்டுகள், கணனிகள், மடிக்கணனிகள்’ மற்றும் ‘அச்சு இயந்திரங்கள்’ என்பன, 35 பாடசாலைகளின் அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

 

பரவலாக்கப்பட்ட நிதியை பிராந்திய அபிவிருத்திக்காக, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தி இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உரையாற்றும்போது:

 

“எங்கள் பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதுதான், செழிப்பான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல். பொது நிதியைப் பொறுப்புடன் பயன்படுத்தி, திறமையான மாணவர்களை வலுப்படுத்த, அவை மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு வழி நடத்துவது தான் எங்கள் பொறுப்பு. இலவசக் கல்வியை ஆதரிப்பதற்கும், எங்கள் பாடசாலைகளுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவதற்கும் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

 

இந்நிகழ்வில், கொழும்பு பிரதேச செயலக பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி நாலினி சுபசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ் தீன் சில்மி மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை...

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான...