மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்டம் செய்ய, இளவரசர் வில்லியம் பந்துவீசினார். அவரது மனைவி கேத் மிடில்டனும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
சுற்றுச்சூழலுக்கான உலகின் முன்னணி விருதுகளில் ஒன்றான 2026ஆம் ஆண்டுக்கான ‘எர்த்ஷாட்’ விருது நிகழ்வில் பங்கேற்பதற்காக இருவரும் இந்தியா சென்றுள்ளனர்.
இந்தியா – பிரிட்டன் இடையிலான பல்வேறு துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் இளவரசர் வில்லியம் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.



