பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி லக்னோவில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

 

 

 

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

 

 

இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த ரிங்கு சிங், திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 

பிரதமரைச் சந்தித்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர், இது தமது குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இதற்கு முன்னதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியின் துணை தலைவராகவும் ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி...

முதல் மின்சார விமானம் – சீனாவின் புதிய சாதனை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.       சுமார்...