சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

 

 

மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்டம் செய்ய, இளவரசர் வில்லியம் பந்துவீசினார். அவரது மனைவி கேத் மிடில்டனும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

 

 

சுற்றுச்சூழலுக்கான உலகின் முன்னணி விருதுகளில் ஒன்றான 2026ஆம் ஆண்டுக்கான ‘எர்த்ஷாட்’ விருது நிகழ்வில் பங்கேற்பதற்காக இருவரும் இந்தியா சென்றுள்ளனர்.

 

 

இந்தியா – பிரிட்டன் இடையிலான பல்வேறு துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

 

 

மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் இளவரசர் வில்லியம் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம்...

முதல் மின்சார விமானம் – சீனாவின் புதிய சாதனை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.       சுமார்...