Date:

Breaking : தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாது

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்வாறு கொவிட்  தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள்ளும் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் பாதைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...

மள்வானையில் நடைபெற்ற தேசிய மிஹ்ராஜ் தின நிகழ்வு!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று ( 17) சனிக்கிழமை...

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...