Date:

குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி இரத்தம்

தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் இரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ‘சிக்கன் பேரண்டிங்’ எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீன பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகள் புத்திசாலிகளாக, வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களது நிகழ்காலத்தை அடகு வைக்க தயங்கவே மாட்டார்கள்.

சிலர் தங்களது குழந்தைகளுக்கு அறிவுச் செல்வத்தை சேமித்து தரும் செயல்களை மேற்கொள்வார்கள். ஆனால், வேறு சிலரோ குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வினோதமான செயல்களைச் செய்வார்கள். தற்போது சீனாவிலும் அது போல் தான், சிக்கன் பேரண்டிங் (chicken parenting) எனப்படும் வினோதப் பழக்கம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

ஊசி மூலம் ரத்தம்

கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும் இந்த சிக்கன் பேரண்டிங் முறையில், பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழியின் இரத்தத்தை ஊசியை செலுத்துகிறார்கள். இது எதிர்காலத்தில் அக்குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருப்பதற்கும், கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்?

இலங்கை வழங்கியுள்ள கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச...

8 பேருக்கு மரண தண்டனை விதித்தது களுத்துறை மேல் நீதிமன்றம்

களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2003...

மாணவர்கள் படுகொலை: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் ( காணொளி)

மணிப்பூர் மாநிலத்தில் 'மைத்தேயி' இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால்...

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை...