முதல் மின்சார விமானம் – சீனாவின் புதிய சாதனை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

 

 

 

சுமார் 10 டன் எடை கொண்ட இந்த CE-25A விமானம், குறுகிய தூர நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்காக 19 இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும்.

 

 

 

கடந்த சனிக்கிழமை கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோ நகரில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

 

 

இந்த சோதனைப் பயணத்தில் 2 விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளர் என மொத்தம் 3 பேர் பயணித்தனர். சுமார் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடந்த இந்த சோதனையில், விமானம் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது.

 

 

 

சீனாவின் அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘கோமாக்’, முன்னணி பேட்டரி நிறுவனமான சி.ஏ.டி.எல் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சி.இ- 25ஏ (CE-25A) என்ற மின்சார விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளன.

 

 

 

இந்நிலையில், சோதனை ஓட்டத்தில், விமானத்தின் அனைத்து அமைப்புகளும் துல்லியமாக செயல்பட்டதாக கோமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

இந்த விமானம், மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கு முன்பாக 19 தானியங்கி சோதனைப் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இந்த வெற்றியின் மூலம், வணிக ரீதியான மின்சார விமானப் போக்குவரத்துத் துறையில் சீனா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம்...

சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி...