Date:

இஸ்ரேல்-காஸா போர் : தொடரும் உயிரிழப்புகள் !

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

 

காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பணயக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

 

இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இதனிடையே காஸா பகுதியின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை சுற்றி வளைத்து கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினா் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

 

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாது, இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையால் நாசர் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளால் நிரம்பியுள்ளது. உள்ளூர்வாசிகள் இறந்தவர்களை கான் யூனிஸ் கல்லறைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் நகரின் நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் அடக்கம் செய்ய வேண்டியிருந்தது எனத் தெரிவித்துள்ளது. இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் நடத்தி வரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 26,422 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 65,087 போ் காயமடைந்துள்ளனா் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...