Date:

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு !

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...

அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...