தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணமாக 150 ரூபாய் அறிவிடப்பட்ட நிலையில், தற்போது 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் பிரதியை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையம் மூலம் ஆட்கள் பதிவுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.