அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வற் வரி (VAT) திருத்தச் சட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், தொலைபேசிகள், சோலார் பேனல்கள், எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும்.
எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.