வடக்கு கடற்பரப்பில் 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
குறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 227 கிலோவிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.