களுத்துறையில் சொகுசு பேருந்தை வழிமறித்து தாக்கிய சம்பவம் – அறுவர் கைது

களுத்துறை – கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் பிரவேசித்து சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சந்தேகநபர்கள் இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தி வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

 

 

வாத்துவ மற்றும் மொரந்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.   அனைத்து அரச பல்கலைக்கழக...

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – டில்வின் சில்வா இடையே சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   இந்த சந்திப்பு...