ஜப்பானிடமிருந்து 4.56 பில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், களனி கங்கை ஆற்றுப்படுக்கையில் நீர் பம்பும் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2.179 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 4.56 பில்லியன் இலங்கை ரூபா) மானிய உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பானிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகாமையான ஊடாக இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது.

இதற்கான பரிமாற்றக் குறிப்புகளில் இலங்கை அரசாங்கம் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் விதுஷா ரோஜானா மற்றும் ஜப்பான் அரசாங்கம் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேன்மை தங்கிய ISOMATA Akio ஆகியோரும், மானிய ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் விதுஷா ரோஜானா மற்றும் ஜிகா நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி HONZU Shigeo ஆகியோரும் கடந்த ஒக்ரோபர் 28 அன்று நிதி அமைச்சில் கையெழுத்திட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

களுத்துறையில் சொகுசு பேருந்தை வழிமறித்து தாக்கிய சம்பவம் – அறுவர் கைது

களுத்துறை - கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் பிரவேசித்து சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி மற்றும் நடத்துனர்...

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.   அனைத்து அரச பல்கலைக்கழக...