மலையகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான பாதைகள் பலவற்றில் மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக நேற்று இரவு பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஹட்டன் – பொகவந்தலாவை வீதியின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை இன்று மழை ஓரளவு குறைவடைந்த நிலையில் காலை முதல் பாதைகளில் காணப்படும் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீதிகளில் வாகனங்களை அவதானமாகச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW