Date:

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.

ஈரான் கடல் பகுதியில், அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் அத்துடன் சில தாக்குதல் கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அமெரிக்காவின் இந்த உத்தரவு பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

இப்படியான அறிவிப்புகளை அமெரிக்க கொடுப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்புகளை அமெரிக்கா கொடுத்து வருகிறது. இருப்பினும், தற்போது நிலைமை கொஞ்சம் சிக்கலாகியிருப்பதால் இந்த அறிவிப்பு உலக நாடுகளால் கவனம் பெற்றிருக்கிறது. ஈரான் வசம் அணுசக்தி தொழில்நுட்பம் இருக்கிறது. இதனை தற்போது வரை மின்சார உற்பத்திக்காக அந்நாடு பயன்படுத்தி வருகிறது. ஆனால், இதனை கொஞ்சம் டெவலப் செய்தால் அணு ஆயுதம் உருவாக்க முடியும்.

எனவே ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கிவிட கூடாது என்பதால், தங்கள் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் கோரி வருகிறார். இந்த கோரிக்கையை ஈரான் பரிசீலித்து வருகிறது. இன்னும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரானை மிரட்ட அந்நாட்டை நோக்கி தனது கப்பற்படையை அனுப்பியுள்ளார் டிரம்ப்.

​அனுப்பியிருக்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் 90க்கும் அதிகமான போர் விமானங்கள் உள்ளன. அதேபோல இந்த கப்பலை அணு குண்டு வீசி மட்டுமே அழிக்க முடியும். போதாத குறைக்கு, ஈரான் மீது தாக்குதல் நடத்த ரகசிய திட்டங்களை வகுத்து வருவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார். இப்படி இருக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...