Date:

அவிசாவளை துப்பாக்கிச்சூடு – நால்வர் கைது

அவிசாவளை துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தகவல் வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு முச்சக்கரவண்டி மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்கியமை போன்ற காரணங்களுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 21ஆம் திகதி இரவு, கேகாலை பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினரை இலக்குவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலைச் சம்பவத்தை தற்போது டுபாயில் தலைமறைவாகியிருக்கும் மன்னா ரமேஷ் நடத்தியதாகக் கிடைத்த தகவலின்படி, இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...