தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் சந்தோஷ் நாராயணன்.
இவரது முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்தடுத்து பீட்சா,சூது கவ்வும்,பீட்சா II, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் பல விருதுகளை பெற்று பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இலங்கை வந்துள்ள சந்தோஷ் நாராயணன் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ‘யாழ் கானம்’ எனும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 03ல் இன்றைய தினம் நடைபெற்றது.
இது தொடர்பில் சந்தோஷ் நாராயணன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதாரத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்வித்து ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக முற்றிலும் இலவசமாக இந்த இசை நிகழ்ச்சியை நடாத்தவுள்ளதாகவும் குறித்த இசைநிகழ்ச்யை தனது சொந்த பணத்தை செலவு செய்து நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW