அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து, 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 335 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய அயர்லாந்து அணி 46.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இந்தநிலையில், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW