பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
லாகூரில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், டில்ஷான் மதுஷங்க (5), அசித பெர்ணாண்டோ, சஹான் ஆராச்சிகே (2), எஷான் மலிங்க, டுனித் வெல்லலாகேயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 111 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 62 (60) ஓட்டங்களோடு 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் அணித்தலைவர் ஷகீன் ஷா அஃப்ரிடி, அரஃபாத் மின்ஹாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக மதுஷங்க தெரிவானார்.


