பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்று (27) ஐந்தாவது போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
லாஹூரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்த தொடரில் தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளதுடன் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பெற்றுள்ளது.
இலங்கை அணி ஒரு போட்டியில் இதுவரை வெற்றி பெற்றுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்வதற்கு இன்றைய போட்டி இலங்கை அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.


