தில்ஷான் மதுஷங்க அபார பந்துவீச்சு – 110 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்!

லாகூரில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில், இலங்கையின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.

 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் அடுத்தடுத்து சரிந்தன.

 

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களையும், ஹசன் நவாஸ் 17 ஓட்டங்களையும், தலைவர் ஷஹீன் ஷா அப்ரிடி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

 

இலங்கை அணி சார்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

 

மேலும் சஹான் அரச்சிகே 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, எஷான் மாலிங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

இதனைத் தொடர்ந்து 111 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி பதிலளித்து ஆட தயாராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இறுதிப் போட்டியில் இலங்கை

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்து...

இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்று (27) ஐந்தாவது போட்டி இடம்பெறவுள்ளது.     இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய...