மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு தொடர்ந்தும் திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்புப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

 

குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (23) பெய்த மழை காரணமாக ஒரு வான் கதவு இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்கத்திற்கு கீழ் கொத்மலை ஓயாவின் இரு மருங்கில் வசிக்கும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்புப் பொறியியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வாகனங்களுக்கான வீதித் தகுதி, பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பில் விளக்கம்

வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.   இந்தச்...

7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ திட்டம்!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக...