14 பிரதான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து வான் பாய்கின்றன

நிலவும் மழைக்கால நிலைமை காரணமாக 14 பிரதான நீர்த்தேக்கங்களும் 9 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தொடர்ந்து வான் பாயும் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, தெதுருஓயா, இராஜாங்கனை, அலிகொடஆர, அம்பகொலவெவ, அதரகல்ல மற்றும் அம்பேவளை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

 

 

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடிகளினாலும், நான்கு வான் கதவுகள் தலா ஒரு அடியினாலும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா மூன்று அடிகளினால் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மேலும் துருவில வெவ, அங்கமுவ, வெனுரொவ வெவ ஆகிய நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடிப்பு: 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் வெளியிடப்பட்டிருந்த மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.     இதற்கமைய 3 மாவட்டங்களிலுள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு...

மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்

இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் தேசிய விளையாட்டு சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.       இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார்...