மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடிப்பு: 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் வெளியிடப்பட்டிருந்த மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

இதற்கமைய 3 மாவட்டங்களிலுள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த முன்னெச்சரிக்கை அறிவித்தலானது நாளை (24) பி.ப. 4 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

 

 

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்; கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, தெரணியகல, ருவான்வெல்லை, தெஹிஓவிட்ட மற்றும் அரநாயக்க ஆகிய பிரிவுகளுக்கும்; நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

 

 

பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை, ஹல்தும்முல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஊவா பரணகம; கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க மற்றும் சீதாவாக்கை; களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை மற்றும் மதுகம; கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர, உடுநுவர, உடுதும்பரை, தெல்தோட்டை, தொலுவ, மினிப்பே, உடபலாத்த, குண்டசாலை மற்றும் மெததும்பரை ஆகிய பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை மற்றும் வரகாப்பொல; குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, இப்பாகமுவ, ரிதிகம மற்றும் கணேவத்தை; மொனராகலை மாவட்டத்தில் மெதகம; நுவரெலியா மாவட்டத்தில் மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு; இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, எஹலியகொட, வெலிகேபொல, கலவானை, இம்புல்பே, நிவித்திகலை, கொலொன்ன, பலாங்கொடை, கொடகவெல, கஹவத்தை, ஓப்பநாயக்க மற்றும் பெல்மதுளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மழைவீழ்ச்சி நிலவரம் மற்றும் ஆபத்துக்கான அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்

இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் தேசிய விளையாட்டு சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.       இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார்...

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   பத்தரமுல்லையில் இடம்பெற்ற அரசாங்க நிலை அளவையாளர் திணைக்கள...