கடந்த மார்ச் 20 திகதி காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்த போது இது வரையில் இர்பான் மெராஜை விடுதலை செய்யாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர், மெராஜ் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலையை தனது ட்வீட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா மற்றும் காஷ்மீர் பத்திரிகையாளர் கூட்டமைப்பு ஆகியவையும் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளன.
இதேவேளை, “இர்பான் மெராஜ் போன்ற மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக துன்புறுத்தப்படக்கூடாது” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் வாரியத் தலைவர் ஆகர் படேல் கூறினார்.