Date:

விலையை கட்டுப்படுத்த நாங்க ரெடி நீங்க ரெடியா?

-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்-

அன்மைக்காலமாக நிந்தவூர் பிரதேச சபை மீதும், முன்னாள் தவிசாளர் மீதும் முகநூல் எழுத்தாளர்கள் பலர் இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அதற்கான தெளிவினை குறித்த விமர்சனதாரர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்களாமென இந்த பதிவை எழுதுகிறேன்.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையினை நிர்ணயிப்பது அரசினுடைய பொருளாதாரக் கொள்கை சம்பந்தமான விடயமாகும். இது இன்று வரை மத்திய அரசிடமே காணப்படுகின்றது. எந்த ஒரு மாகாண சபையிடமும் அல்லது உள்ளூராட்சி மன்றங்களிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

√ விலை நிர்ணயம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் என்ன?

1979 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.
1987 ஆம் ஆண்டின் நியாயமான வர்த்தக ஆணையச் சட்டம்.
1950 ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம்.

இவை அனைத்தும் இரத்து செய்யப்பட்டு இவற்றுக்கு பதிலாக 2003 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க பாவனையாளர் அதிகார சபை கட்டளை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவே தற்பொழுது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடாகும்.

எனவே,
√ பாவணையாளர் அதிகார கட்டளை சட்டத்தினால் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்ன?

(அ) பிரிவு 14 – பொருட்களின் ஆகக்கூடிய விலையினை வழங்குவதற்கான உடன்படிக்கை.

அதிகாரசபையானது, ஏதேனும் பொருட்களின் ஆகக்கூடிய விலை விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பொருட்களின் நியமங்கள் மற்றும் மாதிரிகள்
தயாரிப்பு, இறக்குமதி, வழங்கல், களஞ்சியப்படுத்துதல், விநியோகம் போக்குவரத்து, சந்தைப்படுத்தல் மற்றும் பொருட்களை லேபலிடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்றவற்றினை வழங்குவதற்கு எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரி அல்லது ஏதேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரிகள் சங்கத்துடன் எழுத்து மூலமான உடன்படிக்கையினை மேற்கொள்ளலாம்.

(ஆ) பிரிவு 18 – விதித்துரைக்கப்பட்ட பொருட்களின் விலை மீளாய்விற்கான எழுத்து மூல முன் அனுமதி.

ஏதேனும் பொருள் அல்லது சேவையானது சுக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது அல்லது அதன் ஒரு பகுதி என அமைச்சர் கருதுவாராயின், அமைச்சர் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து அத்தகைய பொருள் அல்லது சேவையானது விதித்துரைக்கப்பட்ட அத்தகைய பொருள் அல்லது சேவையானது, வித்துரைக்கப்ட்ட பொருட்கள் அல்லது செவைகள் என் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்.

வியாபாரிகள் எவரேனும், பா அதிகார கட்டளை சட்டத்தின் பிரிவு 18(1) இன் கீழ் ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் சில்லறை அல்லது மொத்த விற்பனை விலையினைத் தீர்மானிக்க முடியாது.

(இ) பிரிவு 19 மற்றும் 20 – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் படியான ஆகக்கூகூடிய சில்லறை விலையினை நிர்ணயித்தல்.

தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவரினால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படாமை அல்லது சேவைகள் அளிக்கப்படாமை பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமிடத்து, அத்தகைய விடயத்தினை புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேரவைக்கு குறிப்பீடு செய்யலாம்.

20(4) ஆம் பிரிவின் கீழ் பேரவையின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும், அதிகாரசபையானது ஆகக்கூடிய சில்லறை விலையினை நிர்ணயிப்பதற்கு வர்த்தமானியில் கட்டளையொன்றினைப் பிறப்பிக்கும்.

எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவர் விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் அல்லது சேவையின் விலையினை அதிகாரசபையின் முன் அங்கீகாரமின்றி அதிகரிக்க முடியாது. அதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெறுவதற்கு விண்ணப்பதாரி அதிகாரசபைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

எனவே ஒரு பொருளின் விலை நிர்ணயிப்பு தொடர்பாக எந்த ஒரு அதிகாரமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதனை இந்த சட்ட ஏற்பாடுகளில் இருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே,
√ ஒரு பொருளின் விலையினை தீர்மானிக்க வேண்டும் எனில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஒரு வழிகாட்டுதலை நாம் பார்ப்போம்.

பாவணையாளர்களாக நாம் குறித்த ஒரு பொருளின் உச்ச சில்லறை விலையினை நிர்ணயித்து தருமாறு ஒரு கோரிக்கையினை பிரதேச செயலாளர் ஊடாக மாவட்ட விலை நிர்ணய குழுவுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் பாவனையாளர் அதிகார சபையிடமிருந்து பொருளுக்கான உச்ச சில்லறை விலையினை நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

இதை விடுத்து பிரதேச சபையோ அல்லது பிரதேச சபையினுடைய தவிசாளரையோ இதனோடு சம்பந்தப்படுத்தி நாம் பேசுவது என்பது மடமையின் உச்சகட்டம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எமக்கான உரிமையை பெற்றுக் கொள்வதை விடுத்து போலி அரசியல் இலாபங்களுக்காக மக்களை குழப்புகின்ற செயலில் இருந்து இந்த முகநூல் எழுத்தாளர்கள் விடுபட வேண்டும் என்பதை மிகத் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.

விலை நிர்ணயத்தை முறையாக செய்ய நாங்க ரெடி
நீங்க ரெடியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...