அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், அரை சொகுசு (Semi-Luxury)பேருந்து சேவைகளின் கீழ் குறைந்தபட்ச கட்டணமாக காணப்பட்ட 44 ரூபா பேருந்து கட்டணம் 51 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகபட்ச கட்டணமான 3,330 ரூபா பேருந்து கட்டணம் 4,353 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம்...