வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தீர்மானித்துள்னர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நிறைவேற்றுத் தரங்களைப் புறக்கணித்து, 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக இந்நாட்டின் நிறைவேற்றுச் சேவைகளில் தெரிவு செய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் அரசாங்கம் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளமையே இதற்கு உண்மையான காரணமாகும்.
இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 23 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிபர் தர அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.


