Date:

அடிமைத் தீவு விடுதலை பெறுகிறது…..“கொம்பனி வீதி” என பெயர் மாற்றம்

ஆங்கில மொழியில் Slave Island என அறியப்பட்ட கொம்பனித்தெரு என்ற பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ‘கொம்பனித்தெரு’ எனப் பயன்படுத்துவதற்கு இயைபான வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக்க அவர்கள் அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் ஆலோசனையின்பேரில் எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தையொட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் தொடர்பில், தபால்மா அதிபர் மற்றும் கொழும்பு மாநகரசபையின் நகர ஆணையாளர் என்போர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ‘கொம்பனித்தெரு’ எனப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் காலணித்துவ ஆட்சிக் காலத்தின்போது அப்பிரதேசத்தை அழைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட Slave Island என்ற பெயர் இற்றைவரை ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...