டெல்டா திரிபடைந்த தொற்று இலங்கை முழுவதிலும் தீவிரமாகப் பரவிவருகின்ற நிலையில் அதனைத்தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதமாகின்றபோது நாடு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக இலங்கையிலிருந்து புதிய வகை திரிபடைந்த தொற்று உருவாகலாம் என்றும் இலங்கை மருத்துவச் சபையின் தலைவியான வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

                                    




