Date:

சனி,ஞாயிறு தினங்களில் முழு ஊரடங்கு; தீவிர ஆலோசனை

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடு முழுவதும்  தினமும் இரவு 10.00 மணி தொடக்கம், அதிகாலை 04.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ‘டெல்டா’ வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 160 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களிலும் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பிலேயே அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வர்ததமானியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...