ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அவர் இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (24) திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.   நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் இன்று அதிகாலை...

வினாப்பத்திர நெருக்கடி தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கேகாலை பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாபத்திரம் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் விரைவாக...