நாட்டில் மீண்டும் குறைந்த தங்கம் விலை

சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

 

 

 

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4,100 டொலராக தாண்டியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இன்றைய தினம் 3,900 டொலராக மீண்டும் சரிவடைந்துள்ளது.

 

 

 

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, நேற்றைய தினம் (12) 334,000 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று (13) 331,200 ரூபாவாகச் சரிவடைந்துள்ளது.

 

 

 

அதேநேரம், நேற்றைய தினம் 363,000 ரூபாவாக நிலவிய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 360,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்துக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.   உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது...

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச்...