இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

மேலும், இந்த ஆண்டில் இதுவரை துப்பாக்கிகள் உள்ளிட்ட 797 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 2,404 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

காலியிலும் வெள்ளம்

அடுத்த 24 மணிநேரத்தில் காலி மாவட்டத்தின் தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கின் கங்கை...

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்!

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்   சமூகச் செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்   நூருல் ஹுதா உமர்   சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச்...