ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் உறுப்பினரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘களுபோவில அவிஷ்க’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே கொஹுவலை – களுபோவில பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 504 கிராம் ஹெரோயின், இலத்திரனியல் தராசு ஒன்று, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைத்தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


