உலக செம்பியன்களை வீழ்த்திய ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

ஒலிம்பிக் செம்பியன் மற்றும் உலக செம்பியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை விஞ்சி, தற்போதைய உலக தடகள அரங்கின் ஈட்டி எறிதல் போட்டியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிரூபித்து வரும் இலங்கையின் ஈட்டி எறிதல் செம்பியன் ருமேஷ் தரங்க இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

 

தனது வெற்றியையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த ருமேஷ், இதற்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்காகத் தான் வெல்வதற்கு இன்னும் மூன்று பதக்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

“உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது… இலங்கைக்கு இப்படி இரண்டு கிண்ணங்களை கொண்டுவர முடிந்ததைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதுவரை நான் செய்த அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் உருவாக்கியுள்ளேன். இந்த மாதம் 17ஆம் திகதி நூல் வெளியீட்டு விழா (Book launch) நடைபெறவுள்ளது. அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் நான் கடந்து வந்த பாதை தெரியும். எனது அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games), உலக செம்பியன்ஷிப் (World Championship) மற்றும் ஒலிம்பிக். இலங்கைக்காக நான் வென்று கொடுக்க வேண்டியது இன்னும் மூன்று பதக்கங்கள் மட்டுமே.” என்றார்.

 

ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு அடுத்தபடியாக, உலகின் முன்னணி தடகள நட்சத்திரங்கள் பங்கேற்ற முக்கிய தொடராகக் கருதப்படும் அல்டிமேட் செம்பியன்ஷிப் (Ultimate Championship) தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் ருமேஷ் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

 

ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த 8 வீரர்களில் தற்போதைய ஒலிம்பிக் செம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், தற்போதைய உலக செம்பியனான டிரினிடாட் மற்றும் டொபேகோவின் கேஷோர்ன் வோல்கொட், இருமுறை உலக செம்பியன் பட்டம் வென்ற கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் கடந்த பருவம் முழுவதும் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஐரோப்பிய செம்பியனான ஜேர்மனியின் ஜூலியன் வெபரும் அடங்குவர்.

 

இலங்கையின் வெற்றி வீரர் ருமேஷ் தரங்க, பொதுநலவாய செம்பியன், டைமண்ட் லீக் செம்பியன் மற்றும் உலக தரவரிசையில் முதலிடத்திலுள்ள வீரர் என்ற பெருமையுடன் இப்போட்டியில் பங்கேற்றார்.

 

இப்போட்டியின் முதல் முயற்சியில் ரமேஷ் தரங்கவால் 75.89 மீற்றர் திறமையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது.

 

முதல் சுற்று முடிவில் ஜூலியன் வெபர் முன்னிலை வகிக்க, எண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், ருமேஷ் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.

 

இரண்டாவது சுற்றில் எண்டர்சன் பீட்டர்ஸ், ஜூலியன் வெபரை முந்திய நிலையில், அந்தச் சுற்றில் 85.69 மீற்றர் தூரம் எறிந்த ருமேஷ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

 

ஒவ்வொரு சுற்றிலும் தனது திறமையை உயர்த்திய ருமேஷ் தரங்க, மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.

 

ருமேஷ் தரங்க போட்டியின் நான்காவது மற்றும் இறுதி முயற்சியில் 91.09 மீற்றர் என்ற பிரம்மாண்ட எறிதலைப் பதிவு செய்து, தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.

 

இதன்படி, ஆண்கள் ஈட்டி எறிதலில் பொதுநலவாய செம்பியன் மற்றும் டைமண்ட் லீக் செம்பியனான ருமேஷ் தரங்க, ‘வேர்ல்ட் அல்டிமேட் செம்பியன்’ (World Ultimate Champion) பட்டத்தையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

 

இந்த வெற்றிக்காக ருமேஷுக்கு 1,50,000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப் பரிசாகக் கிடைத்ததுடன், அது இலங்கை ரூபாயில் சுமார் 5 கோடிக்கு நிகரானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மகளிர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி கிண்ணத்தை தம்வசமாக்கியுள்ளது.   இலங்கை...

செய்திகள் மகளிர் ஆசிய இறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.   போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதவுள்ளன.   இந்தப் போட்டியானது...