தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது.

 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் நேற்று (14) கையெழுத்தாகியுள்ளன.

 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தாய்லாந்து விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தொழிலாளர் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

களுபோவில அவிஷ்கவின் பிரதான உதவியாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் உறுப்பினரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'களுபோவில அவிஷ்க' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும்...

எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணச்சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற...