Date:

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள்கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தைத் தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்கும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“அவனை கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” நடந்தது என்ன?

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயதான சுசித ஜயவன்ச...

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை - மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர்...

மைத்திரி வழங்கிய இரகசிய வாக்குமூலம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய...

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...