Date:

சிப்பிக​ளுடன் மூவர் வாழைச்சேனையில் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருணாகலுக்கு கனரக வாகனத்தில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பியை  கடத்தி செல்ல முயன்ற  மூன்று பேரை இன்று சனிக்கிழமை  அதிகாலை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – திருகோணமலை பிரதான வீதிசந்தியான நாவலடிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 03.00 மணியளவில் வீதிச்சோதனை நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது வாழைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக  ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கொண்ட 410 மூடை சிப்பிகளை குருணாகலுக்கு கடத்திச் செல்வதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் சிப்பியுடன் கனரக வாகனத்தை மீட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு !

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர் வெட்டு...

33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது !

கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர்...

பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு ? கண்டறிய விசேட கணக்கெடுப்பு

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய...