நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.

 

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் இலஞ்ச அல்லது ஊழல்...

BREAKING NEWS நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.