கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே, நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ திட்டம்!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக...

மின்சார வாகன மின்கலங்களை அகற்றும் முறையில் கடும் குறைபாடு

இருப்பினும், அச்சட்டப்பூர்வ ஏற்பாடுகளை நடைமுறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் விதிமுறைகள், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகளை விரைவாகத் தயாரிக்க வேண்டும் என...